ஸ்ரீவில்லிபுத்தூர்

பிரதமரை விமர்சித்த முகநூல் பதிவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது வெளியாகி உள்ள மெர்சல் திரைப்படம் இன்னும் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.   இந்த திரைப்படத்தை ஆதரித்தும் எதிர்த்தும் பலர் தங்களது முகநூலில் பதிவிட்டு வருகின்றனர்.  அதற்கு பலர் பின்னூட்டம் இட்டு வருகின்றனர்.

ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு அருகில் உள்ள ராமகிருஷ்ணாபுரம் என்னும் இடத்தில் வசிப்பவர் திருமுருகன்.   இவர் வழக்கமாக முகநூலில் பதிவுகளும் பின்னூட்டமும் இட்டு வருகிறவர்களில் ஒருவர் ஆவார்.  இவருடைய முகநூல் நண்பர் மாரிமுத்து.    சமீபத்தில் மாரிமுத்து தனது முகநூல் பக்கத்தில் பெர்சல் திரைப்படத்தைக் குறித்து ஒரு பதிவு இட்டுள்ளார்.

அதற்கு பின்னூட்டம் பதிந்த திருமுருகன் பிரதமர் மோடியைக் குறித்து ஒரு ஆபாசக் கருத்தை பதிந்ததாக சொல்லப்படுகிறது.  இந்த செய்தி பரவவே, இன்று காலை திருமுருகனை ஸ்ரீவில்லிப்புத்தூர் நகர காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.  இவரிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.