மும்பை

டும் ரெயிலில் ஒரு இளைஞர் சுய இன்பம் செய்ததை ஒரு பெண் வீடியோ எடுத்து போலீசிடம் கொடுத்ததால் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை புறநகர் ரெயிலில் நேற்றி ஒரு பெண் பயணம் செய்துக் கொண்டு இருந்துள்ளார்.   பெண்கள் பெட்டியில் தனியாக அமர்ந்திருந்த அவரைப் பார்த்து அடுத்த பெட்டியில் இருந்த ஒரு 30 வயது இளைஞர் இவரை நோக்கி ஆபாச சைகைகள் காட்டி உள்ளார்.   இரு பெட்டிகளுக்கும் இடையில் உள்ள தடுப்புக்கு அந்தப் பக்கம் இருந்த இளைஞர் திடீரென தனது பாண்டின் ஜிப்பை கழற்றி இவரை பார்த்தபடியே சுய இன்பம் செய்துள்ளார்.

அதை தன்னிடம் இருந்த மொபைல் மூலம் வீடியோ படம் எடுத்த அந்தப் பெண் உடனடியாக ரெயில்வே போலீசுக்கு அதை அனுப்பி உள்ளார்.   அந்த வீடியோ பதிவை வைத்து தேடிய போலீசார் இன்று காலை ஆறு மணி அளிஅவில் அந்த இளைஞரை மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் டெர்மினஸ் ரெயில் நிலையத்தில் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவரின் பெயர் க்ருபா படேல் என்பதும் அவர் ஒரிசாவை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.   தனது குற்றத்தை ஒப்புக் கொண்ட அவர் தாம் தினசரி கூலியாக பணி புரிவதாக தெரிவித்துள்ளார்.   அவர் மேல் வழக்குப் பதிவு செய்த போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.