காந்திநகர்,

குஜராத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக அங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி குஜராத்தில் முகாமிட்டு தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மூன்றாவது முறையாக குஜராத் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி அங்கு தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்துகொண்டு ஆதரவு திரட்டி வருகிறார்.

ஏற்கனவே குஜராத் வந்தபோது அம்மாநில மக்கள் அவரை மாட்டுவண்டியில் அழைத்துச்சென்று அமோக வரவேற்பு கொடுத்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்திலும் ராகுல்காந்தி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது,  பிரதமர் மோடிக்கு பகிரங்கமாக கோரிக்கை விடுத்தார். தற்போது நாடு முழுவதும் விவாதமாகி  சர்ச்சைக்குள்ளாகி உள்ள உள்ள அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவின் அதிக பட்ச வருமானம் குறித்து  குறித்து ஒரே ஒரு வரியாவது பேசுங்கள்  என்று வலியுறுத்தி உள்ளார்.

குஜராத்தில்  பலம் வாய்ந்த பிற்படுத்தப்பட்டோர்  சங்க தலைவர் அல்பேஷ் தாக்கோர் காங்கிரசோடு இணைந்து சட்டமன்ற தேர்தலைவ எதிர்கொள்கிறார். அதன் முதல் கட்டமாக நேற்று பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த பொதுக்கூட்டத்தில் அல்பேஷ் தாக்கோர் உடன் அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியும் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது ராகுல் கூறியதாவது,

ஜெய்ஷாவின் மகன் நிறுவனத்தின் வருமானம் 16000 மடங்கு உயர்ந்துள்ளது குறித்து மோடி தெரியப்படுத்த வேண்டும் என்றும், மோடி 2014ம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்றபிறகே ஜெய்ஷாவின் வருமானம் எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது என்று கூறினார். மேலும், ஒரே ஒரு வரியாவது அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா குறித்து மோடி பேச வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும்,   கடந்த மாதம்  படிதார் அனாமத் அந்தோலன் சமிதி  என்னும் படேல் வகுப்பினரின் அமைப்பின் தலைவர் ஹர்திக் பட்டேல் மீது குற்றம் சுமத்திவிட்டு பாரதியஜனதாவில் இணைந்தத  நரேந்திர படேல், தற்போது தனக்கு பாரதியஜனதா கொடுத்த பணம் குறித்து தெரிவித்துள்ளார். பாரதியஜனதாவுக்கு ஆதரவு தெரிவிக்க  ஒரு கோடி ரூபாய் பணம் கொடுப்பதாகவும், இதன் முதல்கட்டமாக 10 லட்சம் கொடுத்ததாகவும், சம்பந்தப்பட்ட  நரேந்திரே பட்டேல் தெரிவித்திருப்பதை சுட்டிக்காட்டிய ராகுல்காந்தி பாரதியஜதான மீண்டும் ஆட்சியை பிடிக்க இதுபோன்ற முறையற்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது என்று கூறினார்.

தொடர்ந்து   குஜராத்தில்  நீண்ட காலமாக ஆளும் பி.ஜே.பிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆட்சியை அகற்றவும், குஜராத்தில் பலம் வாய்ந்த பிற்படுத்தப்பட்டோர் தலைவர் அல்பேஷ் தாக்கோர் தற்போது தங்களோடு இணைந்துள்ளது காங்கிரசுக்கு அதிக பலத்தை கொடுத்துள்ளது என்றும், இதன் காணமாக குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்றும் பேசினார்.

மேலும் , இன்று (பிஜேபி) அரசாங்கம் குஜராத்தின் குரலை ஒடுக்குவதற்கு விரும்புகிறது. தற்போது குஜராத் மக்கள் விழிப்போடு உள்ளனர். ” மோடிஜி, இந்த குரலை நீங்கள் வாங்க முடியாது என்றும்,  அல்பேஷ் தாகோர் மக்களைக் கேட்டு மவுனமாக இருந்து சாதிக்க  வேண்டும் என்றும், “ஒவ்வொரு ஜாதியும் இங்கே கிளர்ச்சி செய்கிறார்கள், எல்லோரும் இங்கே கிளர்ச்சி செய்கிறார்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவர்கள் பிஜேபி அரசாங்கத்தின் பொய்யான வாக்குறுதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கின்றனர் என்றார். சுமார் 30 நிமிடங்கள் ராகுல்காந்தி பேசினார்.

குஜராத்தில், கடந்த ஒரு மாதத்தில் ராகுல்காந்தி மேற்கொண்ட மூன்றாவது பயணம் இது.

 

அதே நேரத்தில் பாஜக-வுக்கு எதிர்ப்புத் தெரிவித்துவரும் பட்டேதார் சமூகத்தைச் சேர்ந்த ஹர்திக் பட்டேலின் நெருங்கிய கூட்டாளிகளான ரேஸ்மா பட்டேல், வருண்  பட்டேல் ஆகியோர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளனர்.

பாஜக தங்கள் பெரும்பான்மையான கோரிக்களை ஏற்றுக்கொண்டுவிட்டதால் அதை எதிர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் மக்கள் தம் பக்கத்தில் இருப்பதாக டிவிட்டரில் கருத்துத் தெரிவித்தார் தலைவர்  ஹர்திக் பட்டேல். அதே நேரத்தில் மற்றொரு தலித் தலைவரான ஜிக்னேஷ் மேவானியும்  காங்கிரசில் வந்து இணைய வேண்டும் என்று அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து பேசிய மேவானி,   தமது நோக்கம் பாஜக-வை வீழ்த்தவேண்டும் என்பதுதான், ஆனால்  காங்கிரசில் இணைவது குறித்து இன்னும் முடிவு ஏதும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.