மும்பை

ம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 19 வயது வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினரைக் கொலை செய்யப்போவதாகவும், ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்போவதாகவும் தொலைபேசியில் மிரட்டல் வந்து. இது தொடர்பாகப் பீகாரைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்,.

இதைப் போல் கடந்த வாரம் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரும் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானிக்கு மூன்று மின்னஞ்சல்கள் முறையே ரூ.20 கோடி, ரூ.200 கோடி, ரூ.400 கோடி பணம் கேட்டு வந்தன. அதில் பணம் கொடுக்காவிட்டால் முகேஷ் அம்பானியைக் கொலை செய்ய போவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அம்பானியின் பாதுகாப்புக் குழு தலைவர் இது குறித்து மும்பை காவல் துறையிடம் புகார் அளித்தார். புகார் தொடர்பாகத் தெலுங்கானாவைச் சேர்ந்த கணேஷ் ரமேஷ் வனபர்தி என்ற 19 வயது  வாலிபர் கைது செய்யப்பட்டார்.  நீதிமன்றம் அவரை வரும் 8 ஆம் தேதி வரை விசாரணைக்காகக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. .

கொலை மிரட்டல் விடுத்த அந்த மின்னஞ்சல் முகவரி சஹாதப் கான் என்பவருக்குச் சொந்தமானது என்றும் பெல்ஜியத்தில் இருந்து அனுப்பப்பட்டதாகவும் காவலர்கள் தெரிவித்தனர். மேலும் இதன் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.