பிதான்னகர், பீகார்

ருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக பல மாநிலங்களில் மோசடி செய்த இளைஞர் பீகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் ஒரு தினசரியில் எஜுகேஷன் பாயிண்ட் என்னும் நிறுவனத்தின் பெயரில் ஒரு விளம்பரம் வந்திருந்தது.   இந்த நிறுவனம் மாநிலங்களுக்கிடையே ஆன மருத்துவக் கல்லூரி இடங்களை ஏற்பாடு செய்வதாக கூறி இருந்தது.  அதை ஒட்டி கபேரி சிங் என்பவர் அந்த நிறுவனத்தை அணுகி உள்ளார்.    அவர்கள் சார்பாக சந்தீப் ஜெயிஸ்வால் என்பவர் கபேரி சிங்கை அணுகி உள்ளார்.

சுமார் 34 வயது மதிக்கத்தக்க இளைஞரான சந்தீப் கொல்கத்தாவில் உள்ள கேபிசி மெடிக்கல் காலேஜில் நன்கொடையாளர் ஒதுக்கீட்டில் வரும் மருத்துவக் கல்லூரி இடத்தை வாங்கித் தருவதாக  வாக்களித்துள்ளார்.   அதற்காக ரூ.35.3 லட்சத்தை வாங்கி உள்ளார்.   ஆனால் இடம் கிடைக்கவில்லை.   அதை ஒட்டி அவர் லக்னோவில் உள்ள வேறொரு கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக கூறி உள்ளார்.

அங்கும் அவரால் இடம் வாங்கித் தர முடியாததால் கபேரி சிங் இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளார்.   காவல்துறை வழக்கு பதிந்து விசாரித்தனர்.   விசாரணையில் பீகாரில் பதுங்கி இருந்த சந்தீப் கைது செய்யப்பட்டுள்ளார்.   மற்றும் அவரிட்ம் இருந்து ஒரு மொபைல் மற்றும் வங்கி ஆவணங்களும் கைப்பற்றாப் பட்டுள்ளது.   காவல்துறை விசாரணை தொடர்ந்து வருகிறது.