ஐடி நிறுவன நிறுவனரின் கவனத்தை ஈர்க்க நினைத்த VIP ஒருவர் தனக்கு தானே ஆப்பு வைத்துக்கொண்ட சம்பவம் தற்போது சமூக வலைதளத்தில் பேசுபொருளாகி உள்ளது.

லெஜிட் AI நிறுவன CEO ஹர்ஷ்தீப் ரப்பல்-லுக்கு சமீபத்தில் வந்த ஒரு இமெயில் subject line-ல் “உங்கள் பெயர் எப்ஸ்டீன் பைல்களில் உள்ளது!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அமெரிக்க பாலியல் மற்றும் சிறுமிகளை கடத்திய குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீன் குறித்த கோடிக்கணக்கான ஆவணங்கள் அடங்கிய பைல்கள் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் எப்ஸ்டீன் பைல்களில் தனது பெயர் என குறிப்பிட்டு வந்த மெயிலை திறந்து பார்த்த ஹர்ஷ்தீப் அது தங்கள் நிறுவனத்தில் வேலை கேட்டு விண்ணப்பித்த ஒருவரின் மெயில் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த நபரை அழைத்த ஹர்ஷ்தீப்-பிடம் தான் ஒரு வேலையில்லா பட்டதாரி (VIP) ஐஐடி ஹைதராபாத் மாணவர் என்றும் கவனத்தை ஈர்க்கவே இப்படி செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

இதனால் கடுப்பான ஹர்ஷ்தீப் தனக்கு வந்த அந்த மெயிலை அனுப்பியவரின் பெயரை மறைத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டதுடன், “நாங்கள் ஒப்பந்தங்கள் (contracts) போன்ற மிகச் சீரியஸான வேலைகளை செய்கிறோம். பொறுப்பும், நம்பிக்கையும் முக்கியம். முதல் மெயிலே இப்படியிருந்தால் பதில் தரவே மாட்டேன். கல்லூரி project மாதிரி அல்ல, இது real business.” என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவிற்கு பதிலளித்துள்ள நெட்டிசன்கள் :

  • “Creative என்று நினைச்சு immature வேலை.”
  • “Hard skills இருந்தாலும் psychology இல்லனா யாரும் வேலைக்கு எடுப்பாங்களா?”
  • “Social media sensationalism எல்லாம் real life-ல் வேலை செய்யாது.” என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், வேலை தேடுவது கடினம் தான். ஆனால் கவனம் பெற வேண்டும் என்பதற்காக, நம்பிக்கையை இழக்கக் கூடாது என்று எச்சரித்துள்ளதுடன் “வித்தியாசம்” காட்ட நினைத்த IIT ஹைதராபாத்தைச் சேர்ந்த அந்த மாணவருக்கு பாடம் நடத்தியுள்ளனர்.

[youtube-feed feed=1]