Younis Khan Becomes First Pakistan Batsman to Score 10,000 Runs

 

வெஸ்ட் இண்டீஸ் – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஜமைக்காவில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 286 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது, பின்னர் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது.
அந்த அணியின் அனுபவ வீரர் யூனிஸ்கான் இந்த தொடருடன் ஓய்வு பெறுகிறார். இந்த போட்டிக்கு முன் அவர் 115 டெஸ்ட் போட்டிகளில் 9977 ரன்கள் எடுத்திருந்தார். இந்த போட்டியில் 23 ரன்கள் எடுத்தால் 10 ஆயிரம் ரன்களை எடுக்கும் முதல் பாகிஸ்தான் வீரர் என்ற சதனையை படைக்கும் வகையில் களமிறங்கினார்.

 

22 ரன்களில் இருந்தபோது, ராஸ்டன் சேஸ் பந்தில் அழகான ஸ்வீப் ஷாட் ஆடி பவுண்டரி எடுத்தார். அந்த பவுண்டரியோடு 10,000 ரன்களைக் கடந்த பெருமையும் கிடைத்தது. இந்தப் போட்டியில் அவர் சந்தித்த 84-வது பந்தில் இந்தச் சாதனையை நிகழ்த்தினார். இது, அவருக்கு 208-வது டெஸ்ட் இன்னிங்ஸ் ஆகும். 10,000 ரன்களைக் கடந்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையைப் பெற்றதும் துள்ளிக்குதித்து தமது ஹெல்மெட்டை கழற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் யூனிஸ்கான்.

 

இதற்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், குமார சங்ககாரா, காலிஸ், டிராவிட், லாரா, ஜெயவர்த்தனே, ஆலன் பார்டர், சுனில் கவாஸ்கர், அலிஸ்டர் குக், சந்திரபால், ஸ்டீவ் வாக் ஆகியோர்  டெஸ்ட் போட்டிகளில் 10,000 ரன்களைக் கடந்துள்ளனர்.

 

23 ரன்களைத் தொடும்போது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 10 ஆயிரம் ரன்கள் என்ற மைல் கல்லை எட்டிய முதல் பாகிஸ்தான் பேட்ஸ்மேன் என்ற பெருமையை எட்டினார். ஆசிய கண்டத்தில் தெண்டுல்கர், டிராவிட், சங்ககரா, ஜெயவர்தனே ஆகியோருக்குப்பின் 10 ஆயிரம் ரன்களை கடக்கும் ஐந்தாவது வீரர் யூனிஸ்கான் ஆவார். மேலும் 10 ஆயிரம் ரன்களைக் கடந்த 13 வது வீரரும் ஆவார்.