சீதாபூர்:
சாலையின் ஓரத்தில் நடந்துசென்ற பெண்ணை கிண்டல் செய்த வாலிபருக்கு அடி உதை விழுந்தது.
பெண் போலீஸ்
உத்தரபிரதேசம் மாநிலம் சீதாபூர்  பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் வேலை செய்பவர் சாந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பெண் போலீஸ். சம்பவத்தன்று சாதாரண உடையில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
சாலையின் மறுபுறம் செல்வதற்காக  சிக்னல் அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த வாலிபர் ஒருவர், அவர் போலீஸ் என்று தெரியாமல் கிண்டல் செய்துள்ளார்.
இதை கண்டித்த சாந்தி அவரை திட்டியுள்ளார்.  இதன் காரணமாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  ஒரு பெண் நம்மை திட்டுகிறாரே என்ற கோபத்தில்  பைக்கில் வத்த வாலிபர் பெண் போலீசின் கையை பிடித்து இழுத்து தாக்க முயற்சித்துள்ளார்.
இதனால் வெகுண்டெழுந்த அந்த பெண் போலீஸ், வாலிபரை, நடு ரோட்டில் வைத்து அடித்து உதைத்துள்ளார்.
இதை பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்கள் உடனடியாக அருகிலிருந்த காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து தகராறு செய்த வாலிபரை கைது செய்தனர். வாலிபரை உதைத்த பெண் போலீசை பொதுமக்கள் பாராட்டினர்.