நிர்பயாவை மிஞ்சிய கொடூரம்: பாலியல் பலாத்காரத்தில் பெண் கொலை

Must read

சண்டிகர்

அரியானாவில் 7 பேர் கொண்ட கும்பல் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியானா மாநிலம் ரோக்தாக் பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண் கடந்த 9-ம் தேதி வேலைக்கு சென்றார். அப்போது 7 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்துள்ளனர்.

பாலியல் பலாத்காரம் செய்ததோடு அந்த பெண்ணின் உடலை சிதைத்து கார் ஏற்றி கொடூரமாக அவரை அந்த கும்பல் கொலை செய்துள்ளது.

டெல்லியில் நிர்பயாவிற்கு நடந்ததை விட கொடூரமான செயல் இதுவாகும். அந்த பெண்ணின் பெற்றோர் கொடுத்த தகவல் அடிப்படையிலேயே அவர் அடையாளம் காணப்பட்டார். இது குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

More articles

Latest article