குண்டூர்:
18வயது இளம்பெண்ணை கற்பழித்து கொலை செய்த இரண்டு பேர் அடித்து உதைத்து கட்டி வைக்கப்பட்டனர். இதில் ஒருவர் உயிரிழந்தார்.
andhra
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தை அடுத்த தவுலாதேவி கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஜாஸ்மின். வீட்டில் தனியாக இருந்த அவரை, அதே ஊரைச் சேர்ந்த் வெமுலா ஸ்ரீசாய் மற்றும் ஜென்னா பவன்குமார் என்ற இரண்டு பேர் ஜாஸ்மினை  தாக்கி பாலியல் பலாத்காரம் செய்து கொன்று விட்டனர். பின்னர் ஜாஸ்மின் கொல்லப்பபட்டது தெரியாதவாறு கழுத்தில் பெல்டை மாட்டி சீலிங் பேனில் தற்கொலை செய்துகொண்டுள்ளது போல் தொங்க விட்டுள்ளனர்.
இதையடுத்து ஜாஸ்மின் தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடினர். கிராமத்தினரை அழைத்து, ஜாஸ்மின், அவளது விருப்பத்திற்கு மாறாக  பெற்றோர் திருமண ஏற்பாடு செய்ததால் தற்கொலை செய்துகொண்டார் என்று கூறினர்.
ஆனால் கிராமத்தினர், தூக்கில் தொங்கிய ஜாஸ்மின் உடலை இறக்கும்போது, அவரது உடலில் காயங்கள் இருந்ததை கண்டனர். இதனால் சந்தேகமடைந்த ஊர் மக்கள் அந்த இரண்டு வாலிபர்களையும் மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர்.
இதுபற்றி கிராமத்தை சேர்ந்தவர்கள்  போலீசாருக்ககு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து வாலிபர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் ஸ்ரீசாய் என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பவன்குமார் என்ற இளைஞருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் கவலைக்கிடமாக உள்ளார்.
இதுகுறித்து மேல்விசாரணை நடைபெற்று வருகிறது.