அருணாச்சல்: மீண்டும் காங். ஆட்சி! இந்தியாவின் இளம் முதல்வர்!

Must read

இடாநகர், 
ச்ச நீதிமன்ற உத்தரவின் படி, அருணாசல பிரதேசம் மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கப்படுகிறது. நாட்டிலேயே இளம் முதல்வரார பெமா காண்டு பொறுப்பேற்கிறார்.
அருணாசல பிரதேசத்தில் நபம் துகி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது.  கட்சி எம்.எல்.ஏக்களில் சிலர் நபம் துகி மீது அதிருப்தி கொண்டு தனி அணி அமைத்தனர். இதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி ஆட்சி அமைக்க பாஜக முயன்றது. அம் மாநிலத்தில் கவர்னர் உதவியுடன் குடியரசு தலைவர் ஆட்சியை அமல் படுத்தியது.

பெமா காண்டு
பெமா காண்டு

இதை எதிர்த்து முதல்வர நபம்துகி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். விசாரணை முடிவில், குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தியதை தள்ளுபடி செய்து தீர்ப்பானது.
இதையடுத்து அங்கு மீண்டும் காங்கிரஸே ஆட்சி அமைக்கும் சூழல் உருவானது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணைத்தலைவர் ராகுல் காந்தி அலுவலகத்தில்இருந்து அதிருப்தி எம்.எல்.ஏக்களிடம் பேசப்பட்டது.
அவர்களும் மீண்டும் அமையும் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு அளிக்க ஒப்புக்கொண்டனர்.  மேலும் நபும் துதிக்கு பதிலாக பெமா காண்டு முதல்வராக பதவி ஏற்பது என்றும் முடிவானது.
36 வயதான பெமாகாண்டு, நாட்டிலேயே இளம் முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்ட விதிமுறைகளை மீறி, கவர்னர் உதவியுடன் குடியரசு தலைவர் ஆட்சியை அமைத்த மத்திய பாஜக அரசுக்கு, உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
 

More articles

Latest article