டெல்லி: கொரோனாவுக்கு அலோபதி மருந்து தற்காலிக தீர்வு மட்டுமே, ஆயுர்வேத மருந்து நிரந்தர தீர்வைத்தரும் என பிரபல யோகா குருவான பாபாராம்தேவ் கூறியதற்கு அலோபதி மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாபா ராம்தேவ் குறித்து மதத்துவேசம் பேசுவதை விடுத்து கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்துங்கள் என டெல்லி மெடிக்கல் அசோசியேசன் (DMA – Delhi Medical Association) தலைவருக்கு நீதிமன்றம் அறிவுரை கூறி உள்ளது.
கொரோனா மருத்துவம் குறித்து பாபாராம்தேவ் கூறிய கருத்துக்கு எதிராக இந்திய மெடிக்கல் அசோசியேஷன் சார்பில்பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பாபாராம்தேவ் தரப்பில் பதில்மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், கொரோனா சிகிச்சையில் ஆயுா்வேத மருந்துகளைவிட அலோபதி மருந்துகள் சிறந்தவை என்று நிரூபிப்பதாகக் கூறி ஐஎம்ஏ தலைவா் ஜெ.ஏ.ஜெயலால் இந்து மதத்துக்கு எதிராகவும், கிறிஸ்தவ மதத்துக்கு ஆதரவாகவும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். தனது டிஎம்ஏ தலைவா் பொறுப்பை முறைகேடாகப் பயன்படுத்தி இந்து மதத்தவரை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்ற அவா் முயற்சிக்கிறாா். இந்து மதம் மற்றும் ஆயுா்வேதத்துக்கு எதிராக பத்திரிகைகள், ஊடகங்களில் எழுத, பேச அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் ஐஎம்ஏ தலைவரின் கட்டுரைகளும் பேட்டிகளும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன.
இந்த வழக்கின் விசாரித்த நீதிமன்றம், டிஎம்ஏவை கடுமையாக சாடியது. உங்கள் வாதங்களின் முழு சாராம்சம் என்னவென்றால், பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர். கொரோனில் ஒரு சிகிச்சை அல்ல, பொது நலனுக்கு தீங்கு விளைவிக்கிறது, அதற்காக CPC இல் ஒரு விதி உள்ளது, அதை புரிந்துகொள்ளுங்கள் என்று கூறியதுடன், மருத்துவ நோய்களுக்கு உலகில் ஒரு உண்மையான சிகிச்சை ஆயுர்வேதம் மட்டுமே என்று ராம்தேவ் நம்புகிறார் என்றால், அதை நம்புவதற்கும் அதை வெளிப்படுத்துவதற்கும் அவருக்கு உரிமை உள்ளது. அதை இந்திய மருத்துவ சங்கத்தினர் புரிந்து கொள்ளவில்லை. யோகா குரு ஆயுர்வேத அறிவியலைப் பயன்படுத்தி தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார் என்பது பெரும்பாலான தாராளவாதிகள் பழகுவதற்கு கடினமாக உள்ளது என்பது ஒரு உண்மை. இவ்வாறு, சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், அவரது குரலை அடக்குவதற்காக துபோன்ற அற்பமான வழக்குகளைப் பயன்படுத்துவது ஆரோக்கியமற்றது என்று கூறியது.
விசாரணையின்போது, டிஎம்ஏ தலைவர் சார்பில், வாதாடிய வழக்கறிஞர், இந்து மதத்துக்கு எதிராக ஐஎம்ஏ தலைவர் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை எனவும் எந்த நபரையும் கட்டாய மதமாற்றத்துக்கு உட்படுத்தவில்லை என்றும் கூறப்பட்டது. மேலும் ஐஎம்ஏ தலைவர் ஜெய்ஸ்வால் ஆயுா்வேத மருத்துவத்துக்கு எதிரான நபா் அல்ல என்றும், ஆனால், அலோபதி மற்றும் ஆயுா்வேத மருந்துகளை கலந்து அளிக்கும் சிகிச்சையை மட்டுமே எதிா்ப்பதாகவும் கூறினாா்.
இதையடுத்து மனுவை விசாரித்த நீதிபதி கூறுகையில் ஜெயலால் அளித்துள்ள உத்தரவாதத்தை ஏற்று அவருக்கு எந்த தடையும் விதிக்க வேண்டிய தேவையில்லை. அதேவேளையில் எந்தவொரு மதம் குறித்து பிரசாரம் செய்ய டிஎம்ஏ அமைப்பை ஜெயலால் பயன்படுத்தக் கூடாது. இந்திய அரசியலமைப்பின் கோட்பாடுகளுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கை யிலும் அவா் ஈடுபடக் கூடாது என்று கூறியதுடன், ராம்தேவின் வெளிப்படையான கருத்துக்கள் காரணமாக, எந்தவொரு ஆத்திரமூட்டும் அறிக்கைகளையும் வெளியிட வேண்டாம் என்று பதஞ்சலியின் நிறுவனருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டதுடன், மூன்று வாரங்களில் இந்த வழக்கு குறித்து அவரது பதில் தெரிவிக்கவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.