சென்னை: காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவுக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், அவரது விலக்கு கோரிய மனுவை தள்ளுபடி செய்தது.

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தை முதலில், ஆடு கோழிகள் கொண்டு வந்து சர்ச்சையை தொடங்கியவர்கள் மீதும், மலைமீது, பிரியாணி எடுத்துச்சென்று, பிரியாணி உண்டு சர்ச்சையை மேலும் தீவிரமா;fpfa விவகாரம் குறித்து நவாஸ்கனி எம்.பி. உள்பட இஸ்லாமியர்கள் மீது வழக்கு பதிவு செய்யாத காவல்துறை, அதுகுறித்து பேசிய பாஜக மூத்த தலைவர் ராஜா உள்பட இந்து அமைப்பை சேர்ந்தவர்கள்மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், நீதிமன்ற நிபந்தனையை மீறிப் பேசியதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை காவல்துறை விசாரணைக்கு அழைத்தது. இதை எதிர்த்து எச். ராஜா தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், , காவல்துறை விசாரணைக்கு எச்.ராஜா ஆஜராக வேண்டும் உத்தர விட்டுள்ளது.
முன்னதாக, மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக 2025 பிப்.4-ம் தேதி இந்து அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்தது. இதற்கு எதிராக இந்து முன்னணி சார்பில், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கியது. இதில், வெறுப்புணர்வு, கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசக் கூடாது, முழக்கங்கள் எழுப்பக் கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசினார். அப்போது, ‘துணை முதல்வர் உதயநிதி கிறிஸ்துவர், திமுக அரசு இந்து விரோத தலிபான் அரசு, திருப்பரங்குன்றம் போராட்டம் தொடரும். 75 முறை போராடி ராமஜென்ம பூமியை மீட்டது போன்று போராடுவார்கள். ராமர் கோயிலை போன்று தர்காவை மாற்றிவிடுங்கள்’ என பேசியுள்ளார்.
அவரது பேச்சு, மத மோதலுக்கு தூண்டுதலாக இருந்தது, என காவல்துறையினர் திமுக உள்பட சில கட்சிகளைச் சேர்ந்தவர்கள் , புகார் அளித்தனர். அதன்பேரில் சுப்பிரமணியபுரம் காவல்துறையினர், நீதிமன்ற நிபந்தனைகளை மீறியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் ஹெச்.ராஜா மீது மதுரை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மத மோதலை தூண்டும் விதமாக பேசியதாக பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச். ராஜா மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு ஆஜராகக் கோரி காவல்துறை தரப்பில் இருந்து அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த நோட்டீஸுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹெச். ராஜா மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், போலீசார் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.