
சென்னை : சென்னையின் போக்கவரத்து நெரிசலை சென்னை மாநகரப் போக்குவரத்துக் காவல்துறையின் பிரத்யேக ட்விட்டர் பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம்.
சாதாரண நாட்களிலேயே சென்னை மாநகர சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். அதுவும் காலை மாலை நேரங்களில் அதிகமாக நெரிசல் இருக்கும். குறிப்பாக மழைக்காலங்களில் சொல்லவே வேண்டாம்.
இந்த பிரச்னையை தீர்க்கும் நோக்கில் சென்னை மாநகரப் போக்குவரத்துக் காவல்துறை புதிய ட்விட்டர் பக்கத்தை துவங்கி உள்ளது. @CCTraffic_Alert என்கிற அந்தப் பக்கத்தை மக்கள் பின் தொடர்ந்து, சென்னையின் ட்ராபிக் குறித்த அப்டேட்டுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும்.
Patrikai.com official YouTube Channel