திருச்சி: கொஞ்ச நஞ்சம் பேச்சா… திரள்நிதி திருடிய உனக்கே இவ்வளவு திமிரா! சீமானை திருச்சி சரக டிஐஜி வருண்குமார் ஐபிஎஸ் ஒருமை யில் சீண்டி இருப்பது மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை தமிழ்நாடு அரசும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதும் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையில், பல்வேறு வழக்குகளை சீமான்மீது பதிவு செய்துள்ள தமிழ்நாடு காவல்துறை, அவரை, ஈரோடு இடைத்தேர்தல் முடிந்ததும், கைது செய்ய திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே நாம் தமிழர் கட்சி சீமான் விவகாரத்தில், வருண்குமார் ஐபிஎஸ்-சும் சீமானும், தாங்கள் இருந்து வரும் பதவிகளுக்கு இழுக்கை ஏற்படுத்தும் வகையில், தரம்தாழ்ந்து விமர்சித்து வரும் நிலையில், தற்போது வருண்குமார் ஐபிஎஸ், சீமான் குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பது நாம் தமிழர் கட்சி தொண்டர்களிடையே மேலும் கொந்தளிப்பை எற்படுத்தி உள்ளது.
உயர் பதவியில் உள்ள ஒரு ஐபிஎஸ் அதிகாரி, அரசியல் கட்சி தலைவரை தரம் தாழ்ந்து விமர்சித்து வருவதுடன், மோதல் போக்கில் நடந்து கொள்வது, காவல்துறை மீதான நன்மதிப்பை கெடுக்கும் வகையில் உள்ளது. இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய திமுக அரசும், மாநில டிஜிபியும், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதும், விவாதப் பொருளாகி உள்ளது.

பெரியார் குறித்து சீமான் தொடர்ந்து பேசிவருவது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக சீமானுக்கு, ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி வருகிறது. இதை வைத்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அரசியல் செய்து வருகின்றன. மேலும் சீமான் மீது திட்டமிட்டே பல பகுதிகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதும், அவருக்கு திமுக அரசு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருவதும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், திருச்சி டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கில் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என்று திருச்சி குற்றவியல் நீதிமன்றம் கடந்த 21 ஆம் தேதி உத்தரவிட்டது. மேலும், அவர் நேரில் ஆஜராக விலக்கு தர முடியாது என்றும் உயர்நீதிமன்றம் கூறி உள்ளது. இதனால், அவர் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரோடு இடைத்தேர்தல் முடிந்ததும், சீமான் கைது செய்யப்ப்படலாம் என கூறப்படுகிறது.
இச்சூழலில் தான் சீமானை கடுமையாக தாக்கி டிஐஜி வருண்குமார் Facebook பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”கொஞ்சநஞ்சம் பேச்சா… திரள்நிதி திருடிய உனக்கே இவ்வளவு திமிரு என்றால் உழைத்து படித்து முன்னேறியவர்களுக்கு எவ்வளவு திமிர் இருக்கும் ” என்று கூறியிருக்கிறார். ஏற்கனவே, “நான் வகிக்கும் ஐபிஎஸ் மற்றும் எஸ்.பி பதவி என்பது திரள் நிதியிலோ, யாசகம் பெற்றோ வந்தது அல்ல. கடினமாக உழைத்து, இரவு பகலாக படித்து, ரத்தம் வியர்வை சிந்தி, சொந்த உழைப்பில் வாங்கிய வேலை என்று வருண்குமார் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் பதிவிட்டிருந்தார்.
இதுபோல் சீமான் பெயரை குறிப்பிடாமல் தொடர்ந்து அவர் சீமானுக்கு எதிரான கருத்துகளை பதிவு செய்து வருகிறார். ஒரு காவல் அதிகாரிக்கு எவ்வளவோ வேலை இருக்கும் ஆனால் அதையெல்லாம் விட்டு விட்டு சீமானுக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு சமூக பதட்டத்தை ஒரு டிஐஜி யே உருவாக்கலாமா என்றும், வருண்குமார் சீமானுக்கு எதிராக அவதூறு வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது பொதுவெளியில் இவர் இப்படி ஒரு கட்சியின் தலைவரை ஒருமையில் பேசுவது காவல் துறைக்கு அழகல்ல என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
இதுபோல ஒரு திமுக தலைவரையே, மற்ற அரசியல் கட்சி தலைவரையோ எந்தவொரு காவல்துறையினராலும் விமர்சிக்க முடியுமா என கேள்வி எழுப்பப்பட்டு வருவதுடன், ஒவ்வொரு பகுதியிலும் திமுகவினர் காவல்துறையினரை எவ்வளவு கேவலமாக பேசுகிறார்கள் என்பது காவல்துறையினருக்கு தெரியுமா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தொடரும் மோதல்: ‘நீ அவ்வளவு பெரிய அப்பா டக்கரா?’ என வருண்குமார் ஐபிஎஸ்-ஐ நார் நாராய் கிழித்த சீமான்…
அரசியல் கட்சி தலைவர்போல அட்ராசிட்டி: காவல்துறை அதிகாரி வருண்குமார் – சீமான் மோதல் உச்சக்கட்டம்