அயோத்தி
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்குப் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
வரும் 22 ஆம் தேதி உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. வரும் 15 ஆம் தேதிக்குள் ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்து ஜனவரி 16 ஆம் தேதி சிலை பிரதிஷ்டை பூஜை தொடங்கி, 22ஆம் தேதி வரை நடைபெறும்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க பல்வேறு ஆன்மீக மற்றும் அரசியல் தலைவர்கள் வர உள்ளனர். எனவே இங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன நேற்று உத்தர பிரதேச முதல்வர் அலுவலகம் அதிகாரிகளுக்கு சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
அதன்படி அயோத்தி நகரானது, மிக தூய்மையான மற்றும் அழகான நகராக இருக்க வேண்டும்., அயோத்தியில் தூய்மைக்கான கும்ப மாடலை அமல்படுத்த வேண்டும்., சாலைகளில் தூசு காணப்படக் கூடாது.கழிவறைகள் தினமும் தூய்மைப்படுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
முதல்வர் கோவிலின் வளர்ச்சி பணிகளைப் பற்றி முழு அளவில் ஆய்வு செய்த அவர், புனிதர்கள் மற்றும் சாமியார்களின் நலன்களைப் பற்றியும் கேட்டுத் தெரிந்து கொண்டார். அவர் கூபெர் திலா பகுதிக்கு சென்று ஜடாயுவுக்கு அஞ்சலியும் செலுத்தினார்.