தமிழ் சினிமாவின் முன்னணி நகைசுவை நடிகராக வளம் வருபவர் யோகிபாபு.அவ்வப்போது ஹீரோவாகவும் வளம் வருபவர்.
இந்நிலையில் இயக்குநர் பி.ஜி.முத்தையா தயாரிக்க விஜயமுருகன் இயக்கும் புதிய படத்திற்கு டைட்டில் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காக்டெயில் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் யோகி பாபு முருகனாக தோன்றியுள்ளார். அவருக்கு பின்னால் காக்டெய்ல் பறவை ஒன்றும் உள்ளது.
இப்படத்தில் யோகிபாபுவுடன் நடிகை அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோரும் நடிக்கவுள்ளனர்.