கோரக்பூர்
துயரத்தில் தவிக்கும் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூற வந்த ராகுல் காந்தியை கண்டித்து முதல்வர் யோகி கோரக்பூர் சுற்றுலாத்தலம் இல்லை என கூறி உள்ளார்.
கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையில் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் மரணம் அடைந்தனர். அந்த துயரில் தவிக்கும் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூற ராகுல் காந்தி வந்தார். அத்துடன் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தெரிவித்தார். இதனால் காட்டமான யோகி அமர்நாத் அதை கண்டித்து பேசி உள்ளார்.
கோரக்பூர் நகரை சுத்தமாக்கும் திட்டத்தை யோகி துவங்கி வைத்துள்ளார். அந்த துவக்க விழா உரையில் அவர் கூறியதாவது :
”கோரக்பூரை சுத்தமாக வைத்துக் கொள்வது அவரவர் கடமையாகும். அதனால் ஒவ்வொருவரும் அவரவர்கள் தாமாகவே முன் வந்து இந்த திட்டத்தில் இணைய வேண்டும். இதற்கு முன்பு ஆட்சி செய்தவர்கள் சுயலாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு மக்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரவில்லை. இங்கு பலரும் தேவை இன்றி வருகை புரிகின்றனர். இது சுற்றுலா தலம் இல்லை என்பதை அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.