திருச்சி:
திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டில் 12 மாடுகளை அடக்கி முதலிடம் பெற்ற புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த யோகேஷ் என்பவருக்கு இருசக்கர வாகனம் பரிசு வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் மாட்டுப் பொங்கல் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெரியசூரியூர் கிராமத்தில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கியது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

இந்த ஜல்லிக்கட்டில் 12 மாடுகளை அடக்கி புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த யோகேஷ் முதலிடம் பிடித்தார்.

முதலிடம் பிடித்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த யோகேஷ்-க்கு இருசக்கர வாகனம் பரிசு வழங்கப்பட்டது.

9  காளைகளை அடக்கிய மனோஜ் இரண்டாவது இடத்தை பிடித்தார்.

சிறந்த காளையாக கைக்குறிச்சியை சேர்ந்த த்மிழ்செல்வன் என்பவரின் காளை தேர்வு செய்யப்பட்டது.

இப்போட்டியில் பங்கேற்ற பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்ற ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் எனும் நபர், காளை முட்டியதில் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு, ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் இருந்த மருத்துவ முகாம் மருத்துவக்குழுவினர் மூலம் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவர்,சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். மீனாட்சி சுந்தரம், தான் வளர்த்த காளை முட்டியே பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.