தஞ்சாவூர்:
மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, தஞ்சாவூர் பெரிய கோவில், நந்தியம் பெருமானுக்கு 200 கிலோ காய்கனிளால் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

ஆண்டுந்தோறும் மாட்டுப் பொங்கல் அன்று உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் 108 பசுக்களுக்கு கோ பூஜைகள் செய்து, நந்தியம் பெருமானுக்கு ஆயிரம் கிலோ காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்படுவது வழக்கம்.

இந்தாண்டு கொரோனா தடை உத்தரவு காரணமாக பக்தர்கள் இன்றி எளிமையான முறையில், ஒரு பசு, கன்றுக்கு சந்தனம், குங்குமம் வைத்து, புத்தாடை அணிவித்து, தீபாரதனை காண்பிக்கப்பட்டு, பசுவிற்கும் – கன்றுக்கும் சர்க்கரை பொங்கல், பழங்கள் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, நந்தியம் பெருமானுக்கு சுமார் 200 கிலோ எடையுடைய காய்கறி, பழங்கள், இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

இந்த பூஜையில் பக்தர்கள் யாரும் இன்றி கோவில் ஊழியர்கள் மட்டுமே கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.