சேலம்:  சேலத்தில் நேற்று பொறியியல் பட்டதாரியான இளைஙர் ஒருவர்  ஆட்சியர் அலுவலகம் வந்து, தனது புகார்மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி  தீக்குளிக்க முயற்சித்த  நிலையில், இன்று  இன்று விவசாயி ஒருவர், சொத்து பிரச்சினை குறித்துநடவடிக்கை எடுக்க வலியுறுத்தி  கோவணத்துடன்  தனது குடும்பத்தினருடன் ஆட்சியர் அலுவலகம் வருகை தந்தார்.  இரு செயல்களின் பின்னணியிலும் திமுகவினர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சேலம் மாவட்டம் அரிசிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் என்ற பொறியாளர்,  நேற்று  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தலையில் ஊற்றி தீக்குளிக்கும் முறச்சியில் ஈடுபட்டார். உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் தற்கொலைக்கு முயன்ற இளைஞரை எடுத்து தடுத்து நிறுத்தினர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய அந்த போறியியல் பட்டதாரி, இது குறித்து இளைஞர் கூறுகையில், நான்கு ரோடு பகுதியில் முகில் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறினர். அதனை நம்பி நான் மூன்று லட்ச ரூபாய் கட்டினேன். ஒரு வருடம் ஆகியும் இதுவரை வட்டியும் தரவில்லை, அசலும் தரவில்லை. பணத்தை திருப்பி தர கேட்டதற்கு நிதி நிறுவன அதிபர் ஸ்ரீதர் மற்றும் அவரது மனைவி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறியவர், இதுதொடர்பாக  பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கை எடுக்க மறுத்து வருகின்றனர். என்னை மிரட்டுகின்றனர்.  நிதிநிறுவனத்தை சேர்ந்தவர் திமுகவின் முக்கிபுள்ளி ஒருவருக்கு வேண்டியவர் என்பதால், காவல்துறையினர் அவர்மீது நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள்.

நான் ஏமாற்றப்பட்டு உள்ளேன்.   பணத்தை இழந்த என்னால் குடும்பம் நடத்த முடியாத சூழ்நிலை உள்ளது.  அதனால், வேறு வழி இன்றி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றேன் என தெரிவித்தார். இரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் பட்டதாரி வாலிபரை டவுன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இந்த நிலையில், சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்ற விவசாயி, சொத்து விஷயம் தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கஎ  கோமணத்துடன் வந்தார். இதுவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது மனுவில்,  குடும்ப சொத்தில் பாகப்பிரிவினை செய்யப்பட்ட நிலத்தின் ஒரு பங்கையும் அவரது தந்தை மற்றும் சகோதரன் ஆசைதம்பியின் பங்குகளையும் தனது அனுபவத்தில் விவசாயம் செய்து வந்தார். இந்த பாகப்பிரிவினை செல்லாது என்று கூறி இவரது சகோதரி செல்லம்மாள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

இந்த நிலையில் ஆசைதம்பி தனது பங்கை ஈஸ்வரன் என்பவருக்கு விற்பனை செய்ய முயன்றபோது விஜயகுமார் பத்திரபதிவு அலுவலகத்தில் தடங்கல் மனு கொடுத்துள்ளார். அதனை பொருட்படுத்தாத பத்திர பதிவாளர் அடுத்தடுத்து 6 பேருக்கு பதிவு செய்து கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்த விவசாயி விஜயகுமார் கோவணம் மட்டுமே கட்டிக்கொண்டு தனது குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு வந்தார். அதனைக் கண்ட காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தினர். அதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த விவசாயி விஜயகுமார், தனது சகோதரர்களிடம் இறுதியாக வாங்கிய சண்முகம் என்பவர் திமுக பிரமுகர் ஆனந்தன் என்பவருடன் இணைந்து தனது பங்கு உள்பட தன்னிடம் இருந்த ஒட்டுமொத்த இடத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டதாகவும், அதிலிருந்து தேக்கு மரங்களை வெட்டி எடுத்துச் சென்று விட்டதாகவும், அதனை தட்டிகேட்டபோது அடிஆட்களை கொண்டு தன்மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக கூறினார்.

இதுதொடர்பாக   காவல் நிலையத்தில் புகார் அளித்த பின்னும் இதுவரை இந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்தார் உனது உயிருக்கு ஆபத்து உள்ளதால் தனது நிலம் பறிக்கப்பட்டுள்ளதாலும் நிராயுதபாணியாக இருப்பதால் இன்றைய தினம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க குடும்பத்துடன் வந்துள்ளதாக விவசாயி விஜயகுமார் தெரிவித்தார்.