சென்னை
நேற்று தாம் தமிழர் கட்சியின் 40 வேட்பாளர்களையும் சீமான் அறிமுகம் செய்தார்.
நாடெங்கும் வரும் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. வாக்குகள் ஜூன் 4 -ஆம் தேதி எண்ணப்பட உள்ளன. இம்முறை சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கு ‘கரும்பு விவசாயி’ சின்னம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சீமான் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
. ‘கரும்பு விவசாயி’ சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது. நேற்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கான நாம் தமிழர் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 40 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைத்தார்.
இதில். கிருஷ்ணகிரியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக வீரப்பன் மகள் வித்யா ராணி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் சீமான் உரையாற்றும் போது.
“என் மக்கள் என் சின்னத்தைத் தேடமாட்டார்கள், என் எண்ணத்தைத்தான் கவனத்தில் எடுத்துக் கொள்வார்கள். பணம் இல்லையென்றாலும் கவலை இல்லை. என் மக்களுக்குத் தன்னலம் இல்லாமல் சேவை செய்ய வேண்டும் என்ற மனம் இருந்தால் போதுமானது. நாங்கள் வெறும் பதவிக்கானவர்கள் அல்ல, மக்களின் உதக்கானவர்கள். நாங்கள் பணத்திற்கானவர்கள் அல்ல, பெருமைமிக்க தமிழன் என்ற இனத்திற்கானவர்கள்.
நாங்கள் அரசியல் செய்ய வந்தது பிழைப்பதற்காக அல்ல, மக்களுக்கு உழைப்பதற்காக. நாங்கள் களத்தில் நிற்பது கேடு கெட்ட பணநாயகத்தை ஒழித்து, மாண்புமிக்க ஜனநாயகத்தைக் காப்பதற்காக. சின்னம் வைத்திருக்கும் கட்சிகளை விட, சின்னம் எதுவென்றே தெரியாத கட்சி துடிப்போடு களத்தில் நிற்கிறோம். நாங்கள் அழிவின் விளிம்பில் நிற்கும் ஒரு தேசிய இனம். எங்கள் இனத்தைக் காப்பதற்காக எவரும் ஒப்பிட முடியாத அளவிற்கு வேகத்துடன் போராடுவோம்.”
என்று அறிவித்துள்ளார்.