சென்னை
நேற்று நள்ளிரவு சென்னையில் பல பகுதிகளில் மழை பெய்துள்ளது.

நேற்று காலை சென்னை நகரின் பல பகுதிகளில் மழை பெய்தது. மழை விட்ட பிறகு மதியம் வெப்பம் அதிக அளவில் காணப்பட்டது. அதை ஈடு செய்வது போல் நள்ளிரவு நகரின் பல பகுதிகளில் மழை பெய்தது.
நேற்று சென்னையில் நள்ளிரவு நேரங்களில் பல்வேறு இடங்களில் பரவலாகப் பலத்த மழை பெய்தது. குறிப்பாக சேப்பாக்கம், மயிலாப்பூர், கிண்டி, வேளச்சேரி, அண்ணா நகர், பெரம்பூர் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது.
இதைத் தவிர தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், அனகாபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும், புறநகர்ப் பகுதிகளான திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, சோழவரம், பொன்னேரி மற்றும் செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
Patrikai.com official YouTube Channel