காந்திநகர்
நேற்றிரவு குஜராத் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு 9.15 மணியளவில் (இந்திய நேரப்படி) குஜராத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
நேற்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
சுமார் 5 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 21.23 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 70.62 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என தீர்மானிக்கப்பட்டது.
இதுவரை இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.