டில்லி
இந்தியாவில் நேற்று 41,755 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,09,86,803 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 41,755 அதிகரித்து மொத்தம் 3,09,86,803 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 578 அதிகரித்து மொத்தம் 4,12,019 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 39,289 பேர் குணமாகி இதுவரை 3,01,36,483 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 4,26,028 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 8,602 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 61,81,247 ஆகி உள்ளது நேற்று 170 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,26,390 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 6,067 பேர் குணமடைந்து மொத்தம் 59,44,801 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,06,764 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 15,637 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 31,03,310 ஆகி உள்ளது. இதில் நேற்று 128 பேர் உயிர் இழந்து மொத்தம் 14,938 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 12,974 பேர் குணமடைந்து மொத்தம் 29,70,175 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,17,719 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,990 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 28,76,587 ஆகி உள்ளது இதில் நேற்று 44 பேர் உயிர் இழந்து மொத்தம் 35,989 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 2,537 பேர் குணமடைந்து மொத்தம் 28,06,244 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 33,642 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 2,458 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 25,26,401 ஆகி உள்ளது இதில் நேற்று 55 பேர் உயிர் இழந்து மொத்தம் 33,557 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 3,021 பேர் குணமடைந்து மொத்தம் 24,62,244 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 30,600 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 2,591 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,29,579 ஆகி உள்ளது. நேற்று 15 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 13,067 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 3,329 பேர் குணமடைந்து மொத்தம் 18,90,568 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 25,597 பேர் சிகிச்சையில் உள்ளனர்.