டில்லி

ந்தியாவில் நேற்று 40,279 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,13,71,585 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40,279 அதிகரித்து மொத்தம் 3,13,71,486 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 541 அதிகரித்து மொத்தம் 4,20,585 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 40,032 பேர் குணமாகி  இதுவரை 3,05,35,490 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 4,02,996 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 6,269 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 62,58,079 ஆகி உள்ளது  நேற்று 224 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,31,429 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 7,352 பேர் குணமடைந்து மொத்தம் 60,29,817 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 93,479 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 18,531 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 32,54,064 ஆகி உள்ளது.  இதில் நேற்று 98 பேர் உயிர் இழந்து மொத்தம் 15,970 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 15,507 பேர் குணமடைந்து மொத்தம் 30,99,469 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,38,122 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,857 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 28,93,556 ஆகி உள்ளது  இதில் நேற்று 29 பேர் உயிர் இழந்து மொத்தம் 36,352 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 2,050 பேர் குணமடைந்து மொத்தம் 28,33,775 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 23,905 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,819 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 25,46,689 ஆகி உள்ளது  இதில் நேற்று 27 பேர் உயிர் இழந்து மொத்தம் 33,889 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,583 பேர் குணமடைந்து மொத்தம் 24,88,775 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 24,025 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 2,174 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,52,513 ஆகி உள்ளது.  நேற்று 18 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 13,241 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,737 பேர் குணமடைந்து மொத்தம் 19,16,914 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 22,358 பேர் சிகிச்சையில் உள்ளனர்.