டில்லி

ந்தியாவில் நேற்று 40,111 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,05,84,872 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40,111 அதிகரித்து மொத்தம் 3,05,84,872 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 725 அதிகரித்து மொத்தம் 4,02,758 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 42,322 பேர் குணமாகி  இதுவரை 2,96,92,986 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 4,77,019 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 9,336 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 60,98,177 ஆகி உள்ளது  நேற்று 306 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,23,030 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,378 பேர் குணமடைந்து மொத்தம் 58,48,693 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,04,037 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 12,100 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,73,685 ஆகி உள்ளது.  இதில் நேற்று 75 பேர் உயிர் இழந்து மொத்தம் 13,716 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 11,551 பேர் குணமடைந்து மொத்தம் 28,55,460 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,04,037 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,564 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 28,53,643 ஆகி உள்ளது  இதில் நேற்று 59 பேர் உயிர் இழந்து மொத்தம் 35,367 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 4,775 பேர் குணமடைந்து மொத்தம் 27,73,407 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 44,846 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 3,867 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 24,96,287 ஆகி உள்ளது  இதில் நேற்று 72 பேர் உயிர் இழந்து மொத்தம் 33,005 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,382 பேர் குணமடைந்து மொத்தம் 24,27,988 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 35,294 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 3,175 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,02,923 ஆகி உள்ளது.  நேற்று 29 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 12,844 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,692 பேர் குணமடைந்து மொத்தம் 18,54,754 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 35,325 பேர் சிகிச்சையில் உள்ளனர்.