டில்லி

ந்தியாவில் நேற்று 37,607 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,25,11,370 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37,607 அதிகரித்து மொத்தம் 3,25,11,370 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 647 அதிகரித்து மொத்தம் 4,35,788 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 33,970 பேர் குணமாகி  இதுவரை 3,17,46,626 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 3,16,211 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 4,355 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 64,32,649 ஆகி உள்ளது  நேற்று 288 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,36,355 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,240 பேர் குணமடைந்து மொத்தம் 62,43,034 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 49,752 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 24,296 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 38,51,984 ஆகி உள்ளது.  இதில் நேற்று 173 பேர் உயிர் இழந்து மொத்தம் 19,757 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 19,349 பேர் குணமடைந்து மொத்தம் 36,72,357 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,59,355 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,259 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,41,026 ஆகி உள்ளது  இதில் நேற்று 29 பேர் உயிர் இழந்து மொத்தம் 37,184 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,701 பேர் குணமடைந்து மொத்தம் 28,84,032 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 19,784 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,585 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,04,074 ஆகி உள்ளது  இதில் நேற்று 27 பேர் உயிர் இழந்து மொத்தம் 34,761 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,842 பேர் குணமடைந்து மொத்தம் 25,50,710 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 18,603 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 1,248 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,04,590 ஆகி உள்ளது.  நேற்று 15 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 13,750 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,715 பேர் குணமடைந்து மொத்தம் 19,77,163 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 13,677 பேர் சிகிச்சையில் உள்ளனர்.