டில்லி

ந்தியாவில் நேற்று 30,029 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,17,25,399 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,029 அதிகரித்து மொத்தம் 3,17,25,399 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 420 அதிகரித்து மொத்தம் 4,25,228 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 39,304பேர் குணமாகி  இதுவரை 3,08,88,702 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 3,98,910 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 6,869 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 63,15,063 ஆகி உள்ளது  நேற்று 90 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,33,038 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 8,429 பேர் குணமடைந்து மொத்தம் 61,03,325 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 75,303 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 13,984 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 34,25,473 ஆகி உள்ளது.  இதில் நேற்று 118 பேர் உயிர் இழந்து மொத்தம் 16,956 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 16,956 பேர் குணமடைந்து மொத்தம் 32,42,688 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,65,319 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,285 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,08,284 ஆகி உள்ளது  இதில் நேற்று 25 பேர் உயிர் இழந்து மொத்தம் 36,612 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,383 பேர் குணமடைந்து மொத்தம் 28,47,627 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 24,021 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,957 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 25,63,544 ஆகி உள்ளது  இதில் நேற்று 28 பேர் உயிர் இழந்து மொத்தம் 34,130 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,068 பேர் குணமடைந்து மொத்தம் 25,09,029 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 20,385 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 1,546 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,70,008 ஆகி உள்ளது.  நேற்று 15 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 13,410 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,968 பேர் குணமடைந்து மொத்தம் 19,36,016 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 20,582 பேர் சிகிச்சையில் உள்ளனர்.