டில்லி

ந்தியாவில் நேற்று 23,137 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,37,38,188 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,137 அதிகரித்து மொத்தம் 3,37,38,188 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 309 அதிகரித்து மொத்தம் 4,48,070 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 28,671 பேர் குணமாகி  இதுவரை 3,30,07,285 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,69,774 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 3,187 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 65,47,793 ஆகி உள்ளது  நேற்று 49 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,39,011 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,253 பேர் குணமடைந்து மொத்தம் 63,68,530 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 36,675 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 12,161 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 46,64,944 ஆகி உள்ளது.  இதில் நேற்று 155 பேர் உயிர் இழந்து மொத்தம் 24,965 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 17,862 பேர் குணமடைந்து மொத்தம் 44,95,904 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,43,546 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 539 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,75,067 ஆகி உள்ளது  இதில் நேற்று 17 பேர் உயிர் இழந்து மொத்தம் 37,780 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 591 பேர் குணமடைந்து மொத்தம் 29,24,693 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 12,565 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,624 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,62,177 ஆகி உள்ளது  இதில் நேற்று 24 பேர் உயிர் இழந்து மொத்தம் 35,550 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,639 பேர் குணமடைந்து மொத்தம் 26,09,435 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 17,192 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 1,084 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,49,314 ஆகி உள்ளது.  நேற்று 13 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 14,163 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,328 பேர் குணமடைந்து மொத்தம் 20,23,496 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 11,655 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி தாத்ரா – நாகர்ஹவேலி – டாமன் – டையூ பகுதியில் பாதிப்படைந்தோர் ஒருவர் கூட இல்லை.