டில்லி

ந்தியாவில் நேற்று 21,462 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,39,14,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,465 அதிகரித்து மொத்தம் 3,39,14,465 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 276 அதிகரித்து மொத்தம் 4,50,160 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 24,55 பேர் குணமாகி  இதுவரை 3,32,17,637 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,33,591 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 2,681 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 65,70,472 ஆகி உள்ளது  நேற்று 49 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,39,411 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,411 பேர் குணமடைந்து மொத்தம் 63,94,075 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 33,397 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 12,288 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 47,63,695 ஆகி உள்ளது.  இதில் நேற்று 141 பேர் உயிர் இழந்து மொத்தம் 25,952 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 15,808 பேர் குணமடைந்து மொத்தம் 46,18,408 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,18,806 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 442 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,79,773 ஆகி உள்ளது  இதில் நேற்று 7 பேர் உயிர் இழந்து மொத்தம் 37,861 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 635 பேர் குணமடைந்து மொத்தம் 29,30,264 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 11,619 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,390 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,74,233 ஆகி உள்ளது  இதில் நேற்று 27 பேர் உயிர் இழந்து மொத்தம் 35,734 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,487 பேர் குணமடைந்து மொத்தம் 26,21,986 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 16,513 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 643 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,55,306 ஆகி உள்ளது.  நேற்று 7 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 14,236 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 839 பேர் குணமடைந்து மொத்தம் 20,32,520 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 8,550 பேர் சிகிச்சையில் உள்ளனர்.