இந்தியாவில் நேற்று 19,177 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

Must read

டில்லி

ந்தியாவில் நேற்று 19,177 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,40,19,680 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,177 அதிகரித்து மொத்தம் 3,40,19,680 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 249 அதிகரித்து மொத்தம் 4,51,469 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 19,793 பேர் குணமாகி  இதுவரை 3,33,55,097 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,00,004 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 2,219 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 65,83,896 ஆகி உள்ளது  நேற்று 49 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,39,670 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,139 பேர் குணமடைந்து மொத்தம் 64,11,075 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 29,555 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 11,079 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 48,20,698 ஆகி உள்ளது.  இதில் நேற்று 123 பேர் உயிர் இழந்து மொத்தம் 26,571 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 9,972 பேர் குணமடைந்து மொத்தம் 46,95,904 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 97,694 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 357 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,82,089 ஆகி உள்ளது  இதில் நேற்று 10 பேர் உயிர் இழந்து மொத்தம் 37,916 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 438 பேர் குணமடைந்து மொத்தம் 29,34,523 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 9,621 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,280 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,82,137 ஆகி உள்ளது  இதில் நேற்று 19 பேர் உயிர் இழந்து மொத்தம் 35,833 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,453 பேர் குணமடைந்து மொத்தம் 26,30,654 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 15,650 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 517 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,58,582 ஆகி உள்ளது.  நேற்று 8 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 14,276 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 826 பேர் குணமடைந்து மொத்தம் 20,37,691 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 6,615 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

More articles

Latest article