டில்லி
இந்தியாவில் நேற்று 14,287 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,42,45,530 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,287 அதிகரித்து மொத்தம் 3,42,45,530 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 803 அதிகரித்து மொத்தம் 4,57,221 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 13,165 பேர் குணமாகி இதுவரை 3,36,19,942 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,55,180 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 1,418 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 66,07,954 ஆகி உள்ளது நேற்று 36 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,40,134 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 2,112 பேர் குணமடைந்து மொத்தம் 64,45,454 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 18,748 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 7,738 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 49,46,341 ஆகி உள்ளது. இதில் நேற்று 708 பேர் உயிர் இழந்து மொத்தம் 30,685 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 5,460 பேர் குணமடைந்து மொத்தம் 48,36,928 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 78,199 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 478 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,87,313 ஆகி உள்ளது இதில் நேற்று 17 பேர் உயிர் இழந்து மொத்தம் 38,054 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 334 பேர் குணமடைந்து மொத்தம் 29,40,673 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 8,557 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 1,061 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,99,554 ஆகி உள்ளது இதில் நேற்று 12 பேர் உயிர் இழந்து மொத்தம் 36,072 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,286 பேர் குணமடைந்து மொத்தம் 26,51,431 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 12,051 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 381 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,65,235 ஆகி உள்ளது. நேற்று ஒருவர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 14,365 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 414 பேர் குணமடைந்து மொத்தம் 20,46,127 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 4,743 பேர் சிகிச்சையில் உள்ளனர்.