தேனி

ராளமான பொதுமக்கள் பங்கேற்ற ஹேப்பி ஸ்டிரீட் நிகழ்ச்சி நேற்று தேனியில் முதல் முறையாக நடந்துள்ளது.

சமீப காலமாக தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் ஞாயிற்றுக்கிழமை ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ என்ற பெயரில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. தங்கள்  மனஅழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்காக பொதுமக்கள் இதை நடத்துகின்றனர்

இந்த ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சிக்கு மாணவர்கள், வேலைக்கு செல்வோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவ்வர்சையில் நேற்று தேனி மாவட்டத்தில் முத்துதேவன்பட்டி வீரபாண்டி சாலையில் முதல் முறையாக ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி நடைபெற்றது.

நேற்று நடந்த இந்நிகழ்ச்சியில், விளையாட்டு, மேஜிக் ஷோ, உள்ளிட்ட பல அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிகழ்வில் மயிலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், பரதநாட்டியம், இசை நிகழ்ச்சி என நிகழ்ச்சி களைகட்டியது. பொதுமக்கள் உற்சாகத்துடன் இந்நிகழ்வில் கலந்து கொண்டு நடனமாடி மகிழ்ந்தனர்.