திருச்சி

நேற்று பிரதமர் மோடியை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசி உள்ளார்.

நேற்றுடன் மாலத்தீவு சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி அங்கிருந்து நேராக தூத்துக்குடி வருகை தந் தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் மோடி சனிக்கிழமை இரவு திறந்து வைத்தார்.

பிறகு ரூ.4,874 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.  தூத்துக்குடி நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு திருச்சிக்கு புறப்பட்டார். திருச்சி விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.

அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் அமைந்த நிலையில், பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி ச்ந்தித்தது இதுவே முதல் முறையாகும். எடப்பாடி பழனிசாமி இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு கோரிக்கைகள் தொடர்பான மனுவை அளித்ததாக தெரிய வந்துள்ளது.