சென்னை

நேற்று திடீரென எர்டெல்  மொபைல் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

 

நாட்டில்  மொபைல் சேவை வழங்குதில் ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய 2 நிறுவனங்கள் பிரதானமாக உள்ளன.  மற்ற நிறுவனங்கள் சேவை வழங்கினாலும், இந்த இரு நிறுவனங்களுக்கே அதிக வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்திய மொபைல் நெட்வொர்க் சந்தையிலும் இவை இரண்டு நிறுவனங்கள் போட்டி நிறுவனங்களாக இருந்து வருகின்றன.

நேற்று சென்னை, மதுரை, கோவை, தஞ்சை, தென்காசி,நாகை உள்ளிட்ட நகரங்களில் திடீரென ஏர்டெல் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பல்வேறு இடங்களில் ஏர்டெல் தொலைத்தொடர்பு சேவை பாதிப்பால் வாடிக்கையாளர்கள் அவதி அடைந்துள்ளனர்.

இவ்வாறு சிக்னல் கிடைக்காததல் யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை என ஏர்டெல் வாடிக்கையாளர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளை பதிவிட்டனர். உந்த சேவை முடக்கத்தால் வணிகர்கள் கடும் அவதி அடைந்தனர்.

சுமார் நான்கு மணி நேரத்திற்குள் சேவையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு சரி செய்யப்படும் என ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மைய குழு தகவல் தெரிவித்தது.  அதன்படி ஏர்டெல் சேவை சிறிது சிறிதாக அளிக்கப்பட்டது/

[youtube-feed feed=1]