டில்லி
இந்தியாவில் நேற்று 93,828 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 93,828 பேர் அதிகரித்து மொத்தம் 2,91,82,072 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 6,138 அதிகரித்து மொத்தம் 3,59,695 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 1,48,951 பேர் குணமாகி இதுவரை 2,76,45,225 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 11,65,487 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 10,989 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 58,63,880 ஆகி உள்ளது நேற்று 661 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,01,833 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 16,379 பேர் குணமடைந்து மொத்தம் 55,97,304 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,61,864 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 10,969 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 27,28,248 ஆகி உள்ளது இதில் நேற்று 192 பேர் உயிர் இழந்து மொத்தம் 32,291 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 20,246 பேர் குணமடைந்து மொத்தம் 24,80,411 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,15,525 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 16,204 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,74,166 ஆகி உள்ளது. இதில் நேற்று 156 பேர் உயிர் இழந்து மொத்தம் 10,437 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 20,237 பேர் குணமடைந்து மொத்தம் 25,24,248 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,39,060 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 17,321 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 22,92,025 ஆகி உள்ளது இதில் நேற்று 405 பேர் உயிர் இழந்து மொத்தம் 28,170 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 31,253 பேர் குணமடைந்து மொத்தம் 20,59,597 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,04,258 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 8,766 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 17,79,773 ஆகி உள்ளது. நேற்று 67 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 11,696 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 12,292 பேர் குணமடைந்து மொத்தம் 16,64,082 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,03,995 பேர் சிகிச்சையில் உள்ளனர்.