டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,23,02,110 ஆக உயர்ந்து 1,63,428 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 81,398 பேர் அதிகரித்து மொத்தம் 1,23,02,110 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 468 அதிகரித்து மொத்தம் 1,63,428 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 50,384 பேர் குணமாகி  இதுவரை 1,15,22,884 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 6,10,925 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 43,183 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 28,56,163 ஆகி உள்ளது  நேற்று 249 பேர் உயிர் இழந்து மொத்தம் 54,898 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 32,641 பேர் குணமடைந்து மொத்தம் 24,33,368 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 3,66,533 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 2,798 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 11,27,383 ஆகி உள்ளது.  இதில் நேற்று 11 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,633 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,835 பேர் குணமடைந்து மொத்தம் 10,96,239 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 26,197 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 4,234 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 10,01,238 ஆகி உள்ளது  இதில் நேற்று 18 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,585 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,599 பேர் குணமடைந்து மொத்தம் 9,57,769 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 30,865 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 1,271 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,03,260 ஆகி உள்ளது.  நேற்று 3 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,220 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 464 பேர் குணமடைந்து மொத்தம் 8,87,898 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 8,142 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 2,817 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,89,490 ஆகி உள்ளது  இதில் நேற்று 19 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,738 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,634 பேர் குணமடைந்து மொத்தம் 8,59,709 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 17,043 பேர் சிகிச்சையில் உள்ளனர்.