டில்லி
இந்தியாவில் நேற்று 4,12,373 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் நேற்று வரலாறு காணாத அளவுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,12,373 பேர் அதிகரித்து மொத்தம் 2,10,70,852 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,979 அதிகரித்து மொத்தம் 2,30,151 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 3,30,526 பேர் குணமாகி இதுவரை 1,72,69,076 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 35,62,715 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 57,640 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கைஹ் 48,80,542 ஆகி உள்ளது நேற்று 920 பேர் உயிர் இழந்து மொத்தம் 72,662 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 57,006 பேர் குணமடைந்து மொத்தம் 41,64,098 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 6,41,596 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 41,953 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 17,43,933 ஆகி உள்ளது. இதில் நேற்று 58 பேர் உயிர் இழந்து மொத்தம் 5,566 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 23,106 பேர் குணமடைந்து மொத்தம் 13,62,363 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 3,75,657 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 50,112 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 17,41,046 ஆகி உள்ளது இதில் நேற்று 346 பேர் உயிர் இழந்து மொத்தம் 16,884 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 26,841 பேர் குணமடைந்து மொத்தம் 12,36,854 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 4,87,288 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் நேற்று 31,111 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 13,99,294 ஆகி உள்ளது. நேற்று 353 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 14,151 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 40,852 பேர் குணமடைந்து மொத்தம் 11,22,669 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,62,474 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 23,310 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 12,72,602 ஆகி உள்ளது இதில் நேற்று 167 பேர் உயிர் இழந்து மொத்தம் 14,779 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 20,062 பேர் குணமடைந்து மொத்தம் 11,29,532 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,28,311 பேர் சிகிச்சையில் உள்ளனர்.