சென்னை

ன்று முதல் கொரோனாவை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் நேற்று  கடைவீதிகளில் மக்கள் வெள்ளம் அலை மோதியது,

மாநிலம் எங்கும் கொரோனா இரண்டாம் அலை தாக்குதல் அதிக அளவில் உள்ளதால் தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை இன்று முதல் அமலுக்குக் கொண்டு வருகிறது.  இன்று முதல் மளிகை மற்றும் காய்கறிக் கடைகள் மட்டும் அதுவும் மதியம் 12 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வணிக நகரங்களில் இன்று முதல் அனைத்துக் கடைகளையும் அடைக்க வணிகர்கள் ஒப்புதல் அளித்துள்ளதால் அனைத்து கடைகளும் மூடப்பட உள்ளன. இதனால் நேற்று மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பெரிய மற்றும் சிறிய நகரங்களில் கடைவீதிகளில் மக்கள் வெள்ளம் அலை மோதி உள்ளது.

ஏற்கனவே கொரோனா பரவலைத் தடுக்க மக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்கவே ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.  இந்நிலையில் மக்கள் பொருட்களை வாங்குவதற்காக ஏராளமானோர் இவ்வாறு கூடியது அச்சத்தை அளிப்பதாக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.