டில்லி
இந்தியாவில் நேற்று 3,82,602 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,82,602 பேர் அதிகரித்து மொத்தம் 2,06,58,234 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,783 அதிகரித்து மொத்தம் 2,26,169 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 3,37,548 பேர் குணமாகி இதுவரை 1,69,38,548 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 34,84,824 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 51,880 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 48,22,902 ஆகி உள்ளது நேற்று 891 பேர் உயிர் இழந்து மொத்தம் 71,742 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 65,934 பேர் குணமடைந்து மொத்தம் 41,07,092 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 6,41,910 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 37,190 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 17,01,980 ஆகி உள்ளது. இதில் நேற்று 57 பேர் உயிர் இழந்து மொத்தம் 5,508 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 26,148 பேர் குணமடைந்து மொத்தம் 13,39,257 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 3,56,868 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 44,631 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 16,90,934 ஆகி உள்ளது இதில் நேற்று 288 பேர் உயிர் இழந்து மொத்தம் 16,538 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 24,716 பேர் குணமடைந்து மொத்தம் 12,10,013 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 4,64,363 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் நேற்று 25,770 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 13,68,183 ஆகி உள்ளது. நேற்று 288 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 13,798 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 38,683 பேர் குணமடைந்து மொத்தம் 10,81,817 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,72,568 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 21,228 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 12,49,292 ஆகி உள்ளது இதில் நேற்று 144 பேர் உயிர் இழந்து மொத்தம் 14,612 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 19,112 பேர் குணமடைந்து மொத்தம் 11,09,450 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,25,230 பேர் சிகிச்சையில் உள்ளனர்.