செங்கல்பட்டு

செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் 11 கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்துள்ளனர்.

நாடெங்கும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.   இதில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  நேற்று வரை இங்கு 86,265 பேர் பதிக்கபட்டு அதில் 981 பேர் உயிர் இழந்துள்ளனர்.  தற்போது 9,663 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  இதில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 500 க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு சுமார் 10 மணி முதல் இந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.   அதை அடுத்து 4 நோயாளீகள் ஒருவர் பின் ஒருவராக உயிர் இழந்துள்ளனர்.  சுமார் 3 மணி நேரம் இந்த ஆக்சிஜன் தட்டுப்பாடு நீடித்துள்ளது.  அதற்குள் 11 கொரோனா நோயாளிகள் மரணம் அடைந்துள்ளனர்.

அதன் பிறகு அருகில் இருந்த தனியார் மருத்தவமனையில் இருந்து ஆகிச்ஜன் எடுத்து வரப்பட்டு நிரப்பப்பட்டது.    இந்த தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் மருத்துவனமனைக்கு உடனடியாக வந்து ஆய்வு செய்தார்.   அவர் செய்தியாளர்களிடம் மருத்துவமனையில் போதிய ஆக்சிஜன் உள்ளதாகவும் இந்த மரணங்கள் எதிர்பாரா விதமாக நடந்துள்ளதாகவும் இது குறித்து விசாரணை நடப்பதாகவும் தெரிவித்துள்ளார்.