இந்தியாவில் நேற்று 3,42,896 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

Must read

டில்லி

ந்தியாவில் நேற்று 3,42,896 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,42,896 பேர் அதிகரித்து மொத்தம் 2,40,46,120 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,998 அதிகரித்து மொத்தம் 2,62,350 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 3,44,570 பேர் குணமாகி  இதுவரை 2,00,73,367 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 37,00,327 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 42,582 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 52,69,292 ஆகி உள்ளது  நேற்று 850 பேர் உயிர் இழந்து மொத்தம் 78,857 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 54,535 பேர் குணமடைந்து மொத்தம் 46,54,731 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 5,33,294 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 35,297 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,88,488 ஆகி உள்ளது  இதில் நேற்று 344 பேர் உயிர் இழந்து மொத்தம் 20,712 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 34,057 பேர் குணமடைந்து மொத்தம் 14,74,678 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 5,93,078 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 39,955 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,50,890 ஆகி உள்ளது.  இதில் நேற்று 97 பேர் உயிர் இழந்து மொத்தம் 6,151 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 33,733 பேர் குணமடைந்து மொத்தம் 16,05,471 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 4,38,909 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலத்தில் நேற்று 17,745 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 15,80,980 ஆகி உள்ளது.  நேற்று 277 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 16,646 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 19,425 பேர் குணமடைந்து மொத்தம் 13,59,676 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,04,658 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 30,621 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 14,99,485 ஆகி உள்ளது  இதில் நேற்று 297 பேர் உயிர் இழந்து மொத்தம் 16,646 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 19,426 பேர் குணமடைந்து மொத்தம் 13,59,676 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,83,772 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

More articles

Latest article