டில்லி

ந்தியாவில் நேற்று 3,26,014 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,26,014 பேர் அதிகரித்து மொத்தம் 2,43,72,243 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,876 அதிகரித்து மொத்தம் 2,66,229 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 3,52,850 பேர் குணமாகி  இதுவரை 2,04,26,323 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 36,69,573 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 39,923 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 53,09,215 ஆகி உள்ளது  நேற்று 695 பேர் உயிர் இழந்து மொத்தம் 79,552 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 53,249 பேர் குணமடைந்து மொத்தம் 47,07,980 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 5,19,254 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 41,779 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 21,30,267 ஆகி உள்ளது  இதில் நேற்று 373 பேர் உயிர் இழந்து மொத்தம் 21,085 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 35,879 பேர் குணமடைந்து மொத்தம் 15,10,557 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 5,98,605 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 34,694 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,85,584 ஆகி உள்ளது.  இதில் நேற்று 93 பேர் உயிர் இழந்து மொத்தம் 6,244 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 31,319 பேர் குணமடைந்து மொத்தம் 16,36,790 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 4,42,191 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலத்தில் நேற்று 15,647 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 15,96,627 ஆகி உள்ளது.  நேற்று 311 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 16,957 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 26,179 பேர் குணமடைந்து மொத்தம் 13,85,855 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,93,815 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 31,892 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 15,31,377 ஆகி உள்ளது  இதில் நேற்று 288 பேர் உயிர் இழந்து மொத்தம் 16,957 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 20,037 பேர் குணமடைந்து மொத்தம் 13,18,982 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,95,339 பேர் சிகிச்சையில் உள்ளனர்.