சென்னை

சென்னை சிந்தாதிரிபேட்டை வேளச்சேரி ரயில்களில் நேற்று மாலை 4.30 மணி வரை 3 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

”நேற்று நடந்த இந்திய விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சியை பார்வையிட வந்த பயணிகளை திறம்பட கையாள, சிந்தாதிரிப்பேட்டை, சேப்பாக்கம் மற்றும் கலங்கரை விளக்கம் உள்ளிட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டம.

அடிக்கடி பயணிகள் டிக்கெட் எடுப்பதற்கு யு.டி.எஸ். செயலி மற்றும் கியூ.ஆர். குறியீடுகளைப் பயன்படுத்துமாறு வலியுறுத்தி அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.  சுமார் 55 ஆயிரம் பேர்  நாள்தோறும் சிந்தாதிரிப்பேட்டை முதல் வேளச்சேரி வரையில் ரயிலில் பயணித்து வருகின்றனர்.

ஆனால் நேற்று மாலை 4.30 மணி நிலவரப்படி சுமார் 3 லட்சம் பேர் பயணித்துள்ளனர். எனவே பயணிகள் வெகுநேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.. பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்க தேவையான வகையில் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட்டன.

சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே 4-வது வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் சிறப்பு ரயில் இயக்குவதில் சிறிது தாமதம் ஏற்பட்டது”

என்று கூறப்பட்டுள்ளது.