டில்லி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,13,58,645 ஆக உயர்ந்து 1,58,642 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,154 பேர் அதிகரித்து மொத்தம் 1,13,58,645 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 159 அதிகரித்து மொத்தம் 1,58,624 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 16,510 பேர் குணமாகி இதுவரை 1,09,87,857 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,07,499 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 15,602 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 22,97,793 ஆகி உள்ளது நேற்று 88 பேர் உயிர் இழந்து மொத்தம் 52,811 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 7,467 பேர் குணமடைந்து மொத்தம் 21,25,211 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,18,525 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 2,035 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 10,89,479 ஆகி உள்ளது. இதில் நேற்று 12 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,382 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 3,256 பேர் குணமடைந்து மொத்தம் 10,53,859 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 30,937 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 921 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,59,338 ஆகி உள்ளது இதில் நேற்று ஒருவர் உயிர் இழந்து மொத்தம் 12,387 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 992 பேர் குணமடைந்து மொத்தம் 9,38,890 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 8,042 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் நேற்று 175 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,91,563 ஆகி உள்ளது. நேற்று 2 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,182 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 132 பேர் குணமடைந்து மொத்தம் 8,83,113 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,268 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 695 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,58,967 ஆகி உள்ளது இதில் நேற்று 4 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,543 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 512 பேர் குணமடைந்து மொத்தம் 8,41,762 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 4,662 பேர் சிகிச்சையில் உள்ளனர்.