டில்லி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,12,84,311 ஆக உயர்ந்து 1,58,213 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,641 பேர் அதிகரித்து மொத்தம் 1,12,84,311 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 134 அதிகரித்து மொத்தம் 1,58,213 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 17,674 பேர் குணமாகி இதுவரை 1,09,35,803 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,85,665 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 13,659 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 22,52,057 ஆகி உள்ளது நேற்று 54 பேர் உயிர் இழந்து மொத்தம் 52,610 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 9,913 பேர் குணமடைந்து மொத்தம் 20,99,207 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 99,008 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 2,475 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 10,83,531 ஆகி உள்ளது. இதில் நேற்று 14 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,343 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 4,192 பேர் குணமடைந்து மொத்தம் 10,43,473 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 35,415 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 760 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,56,801 ஆகி உள்ளது இதில் நேற்று 6 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,379 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 331 பேர் குணமடைந்து மொத்தம் 9,36,947 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 7,456 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் நேற்று 120 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,91,004 ஆகி உள்ளது. நேற்று ஒருவர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,177 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 93 பேர் குணமடைந்து மொத்தம் 8,82,763 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,064 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 671 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,56,917 ஆகி உள்ளது இதில் நேற்று 5 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,530 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 532 பேர் குணமடைந்து மொத்தம் 8,40,180 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 4,207 பேர் சிகிச்சையில் உள்ளனர்.