டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,01,69,818 ஆக உயர்ந்து 1,47,379 பேர் மரணம் அடைந்து 97,39,382 பேர் குணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 22,350 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,01,69,818 ஆகி உள்ளது.  நேற்று 251 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,47,379 ஆகி உள்ளது.  நேற்று 23,184 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 97,39,382 ஆகி உள்ளது.  தற்போது 2,80,274 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 3,431 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,13,382 ஆகி உள்ளது  நேற்று 71 பேர் உயிர் இழந்து மொத்தம் 49,129 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,477 பேர் குணமடைந்து மொத்தம் 18,06,298 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 56,823 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,005 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,14,488 ஆகி உள்ளது  இதில் நேற்று 5 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,044 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,102 பேர் குணமடைந்து மொத்தம் 8,88,917 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 13,508 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 355 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,80,430 ஆகி உள்ளது  இதில் நேற்று 2 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,091 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 354 பேர் குணமடைந்து மொத்தம் 8,69,478 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 3,861 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,027 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,12,142 ஆகி உள்ளது  இதில் நேற்று 12 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,048 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,103 பேர் குணமடைந்து மொத்தம் 7,90,965 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 9,129 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 5,397பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,32,085 ஆகி உள்ளது  இதில் நேற்று 16 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,931 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,506 பேர் குணமடைந்து மொத்தம் 6,64,951 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 64,032 பேர் சிகிச்சையில் உள்ளனர்.