டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,13,05,979 ஆக உயர்ந்து 1,58,326 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,668 பேர் அதிகரித்து மொத்தம் 1,13,05,979 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 113 அதிகரித்து மொத்தம் 1,58,326 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 10,969 பேர் குணமாகி  இதுவரை 1,09,47,252 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 1,95,766 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 14,317 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 22,66,374 ஆகி உள்ளது  நேற்று 57 பேர் உயிர் இழந்து மொத்தம் 52,667 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 7,193 பேர் குணமடைந்து மொத்தம் 21,06,400 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,06,070 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 2,475 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 10,83,531 ஆகி உள்ளது.  இதில் நேற்று 14 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,343 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,192 பேர் குணமடைந்து மொத்தம் 10,43,473 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 35,415 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 783 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,57,584 ஆகி உள்ளது  இதில் நேற்று 2 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,381 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 406 பேர் குணமடைந்து மொத்தம் 9,37,353 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 7,831 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 174 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,91,178 ஆகி உள்ளது.   நேற்று 2 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,179 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 78 பேர் குணமடைந்து மொத்தம் 8,82,841 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,158 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 685 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,57,602 ஆகி உள்ளது  இதில் நேற்று 5 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,535 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 543 பேர் குணமடைந்து மொத்தம் 8,40,725 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 4,344 பேர் சிகிச்சையில் உள்ளனர்.