டில்லி

ந்தியாவில் நேற்று 1,95,685 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,95,685 பேர் அதிகரித்து மொத்தம் 2,69,47,496 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,496 அதிகரித்து மொத்தம் 3,07,249 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 3,26,671 பேர் குணமாகி  இதுவரை 2,40,47,760 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 25,81,741 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 22,122 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 56,02,019 ஆகி உள்ளது  நேற்று 592 பேர் உயிர் இழந்து மொத்தம் 89,212 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 42,320 பேர் குணமடைந்து மொத்தம் 51,82,592 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 3,27,580 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 25,311 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 24,50,215 ஆகி உள்ளது  இதில் நேற்று 529 பேர் உயிர் இழந்து மொத்தம் 25,811 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 57,333 பேர் குணமடைந்து மொத்தம் 19,83,948 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 4,40,435 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 17,821 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 23,65,788 ஆகி உள்ளது.  இதில் நேற்று 196 பேர் உயிர் இழந்து மொத்தம் 7,585 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 36,039 பேர் குணமடைந்து மொத்தம் 20,98,674 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,59,175 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 34,867 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 18,77,211 ஆகி உள்ளது  இதில் நேற்று 404 பேர் உயிர் இழந்து மொத்தம் 20,872 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 27,026 பேர் குணமடைந்து மொத்தம் 15,57,759 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 3,01,580 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலத்தில் நேற்று 3,894 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 16,73,785 ஆகி உள்ளது.  நேற்று 153 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 19,362 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 11,918 பேர் குணமடைந்து மொத்தம் 15,77,720 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 76,703 பேர் சிகிச்சையில் உள்ளனர்.